குளிர்சாதன பெட்டிக்குள் 5 குழந்தைகள் பிணம்…!!
Read Time:1 Minute, 21 Second
தென் ஆப்பிரிக்காவில் ககாமாஸ் என்ற இடத்தில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு அவரது பேர குழந்தைகள் வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் 3 வயது முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அந்த வீட்டில் பெரிய அளவிலான குளிர்சாதன பெட்டி ஒன்று இருந்தது அதற்குள் ஒளிந்து விளையாடினார்கள்.
அப்போது குளிர் சாதன பெட்டி கதவு மூடிக்கொண்டது. அதை திறக்க முடியவில்லை. பெட்டிக்குள் இருந்த 5 குழந்தைகள் மூச்சு திணறி உயிர் இழந்தனர்.
குழந்தைகளை காணாமல் தேடிய போது 5 குழந்தைகளும் குளிர்சாதன பெட்டிக்குள் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதே பகுதியில் இதே போன்று மற்றொரு சம்பவம் நடந்தது. அங்கு பழுதான கார் ஒன்றை பழுது நீக்கும் பணி நடந்து வந்தது. அப்போது 2 குழந்தைகள் காருக்குள் இருந்தனர். அவர்கள் மூச்சு திணறி உயிர் இறந்தனர்
Average Rating