வளைந்திருந்த முள்ளந்தண்டை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்து இலங்கை மருத்துவர்கள் சாதனை..!!

Read Time:2 Minute, 57 Second

timthumbபிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து இலங்கை மருத்துவர்கள் வியத்தகு சாதனை புரிந்துள்ளனர்.
காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல் நடக்க முடிகின்றது.

இந்த சத்திரசிகிச்சைக்கு முன் அசங்க பியமால் என்ற அந்த மாணவன் ஒரு பக்கமாக சாய்ந்து தான் நடப்பார். இந்த வருடம் க.பொ.த சாதாரணத் தர பரீட்சை தோற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சத்திர சிகிச்சையை பற்றி தெரிவித்த நரம்பியல் விஷேட வைத்தியர் திபால் அத்தநாயக, சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் அவருக்கு இச் சத்திர சிகிச்சையை செய்யக்கூடியவாறு உள்ளதா என்று ஆராய்ந்தோம்.

17 வயது தொடக்கம் 21 வயதெல்லையிலேயே எலும்புகள் தொடர்பான சத்திர சிகிச்சைக்கு மிகவும் உகந்த காலமாகும். அவ்வயதிலே எலும்புகள் ஒன்றுடன் பொருந்துவது இலகு,

இந்த மாணவனின் வயது 17 என்பதால் இந்த சத்திரசிகிச்சை இலகுவாக செய்ய கூடியதாக இருந்தது.

இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திர சிகிச்சையில் முதலில் அந்த மாணவனின் எலும்புக்கூட்டை பிரித்து அவனின் வளைந்த எலும்பை முற்றாக அகற்றினோம்.

இரண்டு வாரத்திற்கு பின் மாணவனுக்கு செய்த முதல் சத்திர சிகிச்சையிலிருந்து குணமாகியதன் பின்னே அடுத்த கட்ட சத்திரசிகிச்சைக்கு சென்றோம்.

அவ்வேளை அவனின் முதுகு புறத்தில் சிகிச்சை மேற்கொண்டு இரண்டு உலோகத் தகடுகளை பயன்படுத்தி அம் மாணவனின் முதுகு வளைவை சரிசெய்தோம்.

இச்சிகிச்சையில் 100 வீதம் சரிசெய்ய முடியாவிட்டாலும் முடிந்தளவு அம்மாணவனின் முதுகு வளைவை சரிசெய்துள்ளோம் என்று வைத்திய நிபுணர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் 11 பேருடன் சென்ற விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது…!!
Next post சீனா: விபரீதத்தில் முடிந்த ராட்டின சவாரி – கீழே விழுந்தவர் பரிதாப பலி – வீடியோ இணைப்பு…!!