யால, வில்பத்து தேசிய பூங்காவுக்கு செல்ல உல்லாசபயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பு

Read Time:1 Minute, 37 Second

கடந்த இரு மாதங்களாக உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள போதும் யால, வில்பத்து தேசிய பூங்காவுக்குள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றுலாப் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் யால தேசிய பூங்காவின் ஹோட்டல் அமைந்துள்ள பகுதி தாக்குதலுக்குள்ளாகி உயிர் இழப்புகள் இடம்பெற்ற நிலையில் இப் பிரதேசம் குளிர்காலத்தில் மூடப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது தொடர்பாக தெரிவிக்கையில் கூறியதாவது; இவ்விரு பூங்காக்களிலும் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்துப்புரவு செய்யும் பணியினை நிறைவு செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி தெளிவாகக் கூறமுடியாதுள்ளது. ஏனைய பூங்காக்கள் விடுதலைப் புலிகளின் ஊடுருவலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இப்பூங்காக்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட்டுத் திரும்ப முடியும் என அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போலி நாணயத்தாள்களின் பாவனை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
Next post விஜய், அஜித், சூர்யா, மாதவன் கூட்டணி