30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சினைகள்…!!

Read Time:2 Minute, 23 Second

wrereஉங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

முப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம். இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்கத் தான் செய்யும். முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய ஆரம்பிக்கிறது. முப்பது வயதுக்குப் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு ஏற்படலாம். முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையும் வரும். சிறுநீரகப் பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன. முப்பது வயதுக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று வருகிறார் சர்வதேச செஞ்சிலுவை பொதுச் செயலர்…!!
Next post பொது மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை…!!