பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பம்
Read Time:1 Minute, 19 Second
பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பமடைந்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 26 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் இளம் வயதிலேயே உலக புகழ் பெற்ற பாடகியாக உருவானார். எனினும் காதல் திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் விவாகரத்து பெற்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். அவர் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது தங்கையான 16 வயது நிரம்பிய ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பமடைந்திருப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஜேமி நடித்து வருகிறார். ஆல்டிரிட்ஜ் என்னும் தொழிலாளரோடு ஏற்பட்ட காதலின் விளைவாக அவர் கர்ப்பமடைந்திருப்பதாக ஓகே பத்திரிகை தெரிவித்துள்ளது.