அந்தரத்தில் தொங்கிய 60 சுற்றுலா பயணிகள்: ஹெலிகொப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்பு..!!

Read Time:2 Minute, 29 Second

timthumbசுவிட்சர்லாந்து நாட்டில் ‘கேபிள் கார்’ விளையாட்டில் ஈடுப்பட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 60 சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் அந்திரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில் உள்ள Verbier என்ற பகுதியில் கேபிள் கார்கள் விளையாட்டு மிகப்பிரபலம்.

இப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அந்தரத்தில் தொங்கியவாறு செல்லும் கேபிள் கார்களில் பயணிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் கேபிள் கார் விளையாட்டில் சுற்றுலா பயணிகள் ஈடுப்பட்டு இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கார்கள் பாதி வழியிலேயே நின்றுள்ளது.

கார்கள் தொடர்ந்து நகர முடியாததால், சுமார் 60 நபர்கள் கடும் குளிரில் போராடியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து மீட்புக்குழுவினர் சென்று 2,500 மீற்றர் உயரத்தில் இருந்தவர்களை கயிறு மூலமாக சில நபர்களை மீட்டனர்.

எனினும், இந்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் கட்டி கார்களோடு சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய உரிமையாளர், ‘இதுபோன்ற விபத்துக்கள் எப்போதாவது தான் ஏற்படும்.

சரியான நேரத்தில் மீட்புக்குழுவினர் வந்ததால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், கேபிள் கார்களில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாதவாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..!!
Next post கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்…!!