கொழும்பில் வரலாற்று காணாத வெப்பம்! உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும் என்ற அச்சம்….!!

Read Time:1 Minute, 52 Second

blogger-image--2042017883கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் உயர்வெப்ப நிலைக்கு சமாந்தரமான முறையில் கொழும்பிலும் தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது.

கொழும்பில் தற்போது 33.3 செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது.

பொதுவாக மனித உடல் 31 செல்சியஸ் வரையான வெப்ப நிலையை மட்டுமே தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது.

அதற்கு கூடிய வெப்ப நிலை நிலவும் போது சிறுநீரகங்கள், இருதயம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் பாதிப்படையாம் என்று கூறப்படுகின்றது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான் வெளியின் உயர்அடுக்கில் வீசும் காற்றில் போதுமான ஈரப்பதன் இல்லாதிருப்பதன் காரணமாக மேகங்கள் உருவாகும் நிலை தடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே வெப்ப நிலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பின் தற்போதைய வெப்பநிலையானது எதிர்வரும் மே மாதம் வரையிலும் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை…!!
Next post உடலெங்கும் ரத்தம் வழிய மகனுக்கு பாலூட்டிய தாய்… நெஞ்சை உருக்கும் போட்டோ…!!