அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது: பயணிகள் விமானம் ரத்து….!!

Read Time:1 Minute, 33 Second

2c420d80-f384-4a68-bb3d-222399ee32df_S_secvpfஅமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இதனால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவில் டெட்ராஸ்ட்டில் இருந்து பிலாடெல்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதற்காக டெட்ராய்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்து இருந்தனர்.

அப்போது அந்த விமானத்தை ஓட்டி செல்லும் விமானி மற்றும் துணை விமானியை மது போதை பரிசோதனை நடத்தினர். அப்போது துணை விமானி அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த விமானி கைது செய்யப்பட்டார். 50 வயது மதிக்கத்தக்க அவர் பென்சில்வேனியாவை சேர்ந்தவர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

துணை விமானி மது போதையில் இருந்ததால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்துக்கு விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் பாராளுமன்ற கட்டிடம் மீது ராக்கெட் வீசி தாக்குதல்: தீவிரவாதிகள் அட்டூழியம்…!!
Next post பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பகுதியில் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் வீராங்கனை…!!