வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

Read Time:2 Minute, 24 Second

201604021651325168_The-water-shortage-in-India-US-scientists-warn_SECVPFவரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் 71 சதவீத தண்ணீரை கடல் மூலம் சூழ்ந்து கிடக்கிறது. மீத முள்ள 29 சதவீதம் பூமிக்கு அடியில் குடிநீராகவும், பனிப்பாறைகளாகவும், ஐஸ் கட்டிகளாகவும் உள்ளன. தற்போது பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் உலகில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினை குறித்து ஆய்வு மேற் கொண்டனர்.

அதில், வருகிற 2050-ம் ஆண்டில் உலகில் அதிக நிலப்பரப்பை கொண்ட ஆசியா கண்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் சிக்கி தவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இன்றைய சமூக பொருளாதார மாற்றம் ஒரு சிறிய அளவிலான காரணமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் புகை போன்ற காற்று மாசுவினால் பருவ நிலை மாற்றமே மிக முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கமும் மிக முக்கிய காரணம் என மசாசூ செட்ஸ் தொழில் நுட்ப நிறுவன விஞ்ஞானி ஆடம் ஸ்கால்சர் உறுதி பட கூறியுள்ளார். இன்னும் 35 ஆண்டுகளில் ஆசியா கண்டத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் 100 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து 10 நாளே ஆன குழந்தையை ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க முயன்ற தந்தை: போலீசில் சிக்கியதும் ஜோக் என்கிறார்…!!
Next post சீனாவில் தானமாக வழங்கும் உறுப்புகள் வீணாகும் அவலம்…!!