அகதியால் பலாத்காரம் செய்யப்பட்ட ஆண் அரசியல்வாதி: இறுதியில் நடந்தது என்ன?

Read Time:2 Minute, 21 Second

norway_man_002நோர்வே நாட்டு ஆண் அரசியல்வாதியை அகதி ஒருவர் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு கிடைத்துள்ள கடுமையான தண்டனை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட அரசியல்வாதி கருத்து தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் உள்ள இடது சாரி கட்சியை சார்ந்த Karsten Nordal Hauken என்ற அரசியல்வாதி 5 ஆண்டுகளுக்கு முன்னர் சோமாலியா நாட்டை சேர்ந்த அகதி ஒருவரால் பலாத்காரத்திற்கு உள்ளானார்.

அகதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தற்போது சிறையில் தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த அந்த அகதி சில தினங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், சிறை தண்டனை பெற்ற ஒரு அகதிக்கு புகலிடம் அளிக்க முடியாது என முடிவு செய்துள்ள அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் அந்த அகதியை உடனடியாக சோமாலியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பலாத்காரத்திற்கு உள்ளான அரசியல்வாதி கவலை தெரிவித்துள்ளார்.

‘அகதி செய்த குற்றத்திற்காக அவர் சிறை தண்டனை அனுபவித்து விட்டார். ஆனால், தற்போது அவரால் நோர்வே நாட்டில் புகலிடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அவர் நாடுகடத்தப்படும் சூழலுக்கு உள்ளாகி இருப்பதற்கு தானும் ஒரு காரணம் என எண்ணும்போது ஒரு வித குற்ற உணர்வு ஏற்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கருத்து தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பக்கத்து கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாப்பிள்ளை…!!
Next post சிரியாவில் கடத்தப்பட்ட 175 தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!