தெருநாயை கட்டியணைத்து காப்பாற்றிய மாணவி- நெஞ்சை உருக்கும் புகைப்படம்…!!
பெரு நாட்டில் தொடர் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில் தெருவோர நாய் ஒன்றை மழையில் இருந்து காப்பாற்றிய பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
பெரு நாட்டின் Huancayo நகரில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு சமீப நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது, இதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையில் நனைந்து ஒதுங்க இடம் இன்றி தெருவோரம் தவித்துக்கொண்டிருந்த ஒரு நாயை அந்த வழியாக வந்த பள்ளி மாணவி ஒருவர் கண்டு பரிதாபப்பட்டுள்ளார்.
உடனடியாக அவர் அந்த நாயை அணைத்து தமது பள்ளிச் சீருடையால் துவட்டி விட்டுள்ளார். மாணவியின் இச்செயலை அந்த பகுதியில் இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
மிருகங்களை நேசிக்கும் மக்கள் இன்னமும் இருப்பதாக கூறும் அந்த நபர், மாணவியின் இச்செயல் தமது இதயத்தை நிரப்பியதாக அந்த புகைப்படத்திற்கு குறிப்பாக பதிவிட்டுள்ளார்.
நெஞ்சைத் தொடும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பல பேரால் பார்வையிடப்பட்டு வைரலாக மாறியுள்ளது.
மேலும் ஆயிரத்து 200 பேருக்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மட்டுமின்றி மாணவியின் ஈர உள்ளத்தை அனைவரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். தெருவோர நாய்களை பாதுகாப்பதும் ஆதரிப்பதும் சிறந்த முன்னுதாரணம் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating