கோவாவில் ரஷிய பெண் கற்பழிப்பு..!!
Read Time:1 Minute, 15 Second
ரஷியாவை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கோவா மாநிலத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள பெர்னம் பகுதியில் ஒரு லாட்ஜில் அவர் தங்கி இருந்தார்.
இந்த லாட்ஜின் அதிபர் ஜேம்ஸ் டிசோசா. இவர் நேற்று அதிகாலை ரஷிய பெண் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு அவரை வலுக்கட்டாயமாக ஜேம்ஸ் டிசோசா கற்பழித்தார்.
இதுபற்றி போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். போலீசார் ஜேம்ஸ் டிசோசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷிய பெண் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அதில் அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை ஊருக்கு திரும்பாமல் ஒரு வார காலம் பனாஜியிலேயே இருக்கும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
Average Rating