தொண்டைமானாறு ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு..!!
தொண்டைமானாறு ஆற்றிலிருந்து 47வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு ஆற்றின் பாலத்துக்கு அருகாமையில் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்களிடமிருந்து வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட பொலிஸாரிடம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து காணாமல்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபரின் சடலமாக இது இருக்கலாம் என அங்கிருந்தவர்களால் கூறப்பட்டது.
எனினும் சடலத்தைக் கரைக்கு கொண்டு வந்தபோது அது அவரின் சடலம் அல்ல என அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சுமார் 47வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் நீலநிற சாரம் அணிந்து காணப்படுவதுடன் கறுப்பு நிற ரீசேட்டும் காணப்படுகிறது. கறுப்பு நிற ரீசேட்டில் வெள்ளை நிறத்திலான ஆங்கில எழுத்துக்களும் சிவப்பு நிறத்தில் 56 என்ற இலக்கமும் பொறிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating