சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்…!!
கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள்.
கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். வரகு குடும்பத்தைச் சேர்ந்தது பனி வரகு.
சிறுதானியங்களில் மட்டும்தான் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவை குறைந்த அளவு உட்கொண்டாலே நிறைவான உணர்வு கிடைப்பதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும்.
சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஓட்ஸ் போன்ற அயல்நாட்டு உணவுகளைத் தவிர்த்து சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நமது உடலில் நடக்கும் பல்வேறுவிதமான வேதியல் மாற்றப் பணிகள் மற்றும் உடல் இயங்கத் தேவையான சக்திக்கு சரிவிகித உணவுகள்தான் ஆரோக்கியமானவை. எனவே, மூன்று வேளைக்கும் சிறுதானிய உணவு என மாறுவதும் நல்லது அல்ல.
தினமும் மூன்று வேளை வீதம் ஒரு வாரத்துக்கு 21 முறை நாம் சாப்பிடுகிறோம். இந்த 21 வேளைகளில் 12 வேளைகள் சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது சிறந்தது.
ஒரு நாள் காலை அல்லது மாலை வேளையில் சிறுதானியத்தில் டிபன்செய்து சாப்பிடலாம்; மற்றொரு நாள் மதிய உணவில் அரிசிக்குப் பதிலாக குதிரைவாலி அரிசியைப் பயன்படுத்தலாம்; இன்னொரு நாள் சிறுதானியத்தில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், சாலட் சாப்பிடலாம்.
சிறுதானிய உணவுகளைப் பொறுத்தமட்டில், அவற்றைச் சமைத்தவுடன் சூடாகச் சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும். எனவே, எப்போதும் புதிதாக சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.
சிறுதானியங்களை ஒரே மாதிரியான வடிவத்தில் சாப்பிட்டால் போரடித்துவிடும். அரிசி, கோதுமை போன்றவைக்கு இல்லாத சிறப்பு, சிறுதானியத்துக்கு உண்டு. ஏனெனில், சிறுதானியத்தில் இனிப்பு, பாயசம், கார வகைகள் என பல வகை ரெசிப்பிகளைச் செய்ய முடியும்.
ஏதாவதொரு சிறுதானியத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது அல்ல.
அதேபோல எல்லா சிறுதானியங்களையும் சேர்த்து அரைத்துப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
சீரான இடைவெளிகளில் ஏழுவிதமான சிறுதானியங்களையும் பயன்படுத்த வேண்டும்.
ஒருநாள் வரகுப் பொங்கல் சாப்பிட்டால், இன்னொரு நாள் சாமைப் பொங்கல்வைத்துச் சாப்பிடலாம்; சிறுதானிய பிரியாணி செய்து சாப்பிடலாம்.
Average Rating