நான் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…!!
பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம் மேற்கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
பல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அந்த இருவரில் ஒரு இளம்பெண் திடீரென்று கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்த அவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதி என விமான பயணிகளை அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பீதியடைந்த விமான ஊழியர்கள், இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதை உணர்ந்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் விசாரணையில் அவர்களிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும், சக பயணிகளை அச்சுறுத்தவும், மது தராத விமான ஊழியர்களை பீதி காட்டவும் இதுபோன்று கூறியதாக அந்த இருவரும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
Average Rating