தூக்கம் இல்லைனு துக்கப்படறீங்களா? இதையெல்லாம் ட்ரை பண்ணி நிம்மதியா தூங்குங்க…!!

Read Time:4 Minute, 9 Second

sleep_well_002.w540தூக்கமின்மை பல காரணங்களால வரலாம். சரியாக சாப்பிடாம இருந்தால், அளவுக்கு அதிகமா சாப்பிட்டால், மன அழுத்தம், குழப்பங்கள், ஜீரணமின்மை என்று இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான வழிமுறைகளை கண்டறிந்தால், தூக்கம் உங்கள் கண்களைத் தழுவும்..

தியானம்:

தூங்கப் போகுமுன் தியானம் செய்தால் மனமும், மூளையும் அமைதி பெறுகிறது. வேண்டாத எண்ணங்கள் உள்ளடங்கி போகிறது. இதனால் தூக்கம் தானாகவே உங்களைத் தொற்றிக் கொள்ளும். முயன்று பாருங்களேன்.

இசை :

இசை, பல்வேறு குழப்பங்களுக்கு மருந்தாகும். நம் மன நிலைக்கும் இசைக்கும் தொடர்புள்ளது. நல்ல இனிமையான இசையைக் கேட்கும் போது, நமது மூளை தானாகவே அமைதி பெற்று, தூக்க நிலைக்கும் வந்துவிடும். பள்ளியில் அல்லது கல்லூரியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, தூக்கம் வருவதும் இதே டெக்னிக்கில்தான்.

இசையைப் போன்று அவர்களின் குரல் ஒலிக்கும் போது தானாகவே தூக்கம் வந்து மாட்டிக்கொள்கிறோம். இரைச்சல் தரக் கூடிய இசையை தவிர்த்து விடுங்கள். இனிமையான இசையை கேட்டு இன்பமான தூக்கத்தை பெறுங்கள்.

ஹாப்ஸ் :

பியர் குடித்தவுடன் தூக்கம் வருவதற்கு காரணம்,அதில் சேர்க்கும் ஹாப்ஸ் என்ற பொருள்தான். அது மூளைக்கு அமைதியைத் தந்து, தூக்கத்தை வரவழைக்கும்..ஹாப்ஸினை சூடான நீரில் கலந்து , ஆறிய பின் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

செர்ரிப் பழச் சாறு :

நமக்கு தூக்கம் வரக் காரணம் மெலடோனின் என்கின்ற ஹார்மோன்தான். செர்ரிப் பழங்கள் இந்த ஹார்மோனை நன்றாக சுரக்க வைக்கும். தினந்தோறும் செர்ரி பழச் சாறு அருந்துவதனால், கண்கள் சொருகி தூக்கம் வருவதை நீங்கள் உணரலாம்.

லாவெண்டர் மலர்கள்:

லாவெண்டர் மலர் மயக்கும் வாசனைக் கொண்டுள்ளது. இந்த மலர்களை நுகர்ந்தால் கண்கள் தன்னாலே சொருகிக் கொண்டு, எப்போது தூங்க ஆரம்பித்தீர்கள் என உங்களுக்கே தெரியாது. அத்தகைய குணம் கொண்டுள்ளது. அல்லது லாவெண்டர் எண்ணெயை நெற்றியில் தடவி மெதுவாக மசாஜ் செய்தாலும் விரைவில் தூக்கம் வரும்.

முறையான தூக்கம் :

ஒரு சரியான நேரத்தை தூங்குவதற்கு கடைபிடியுங்கள். ஒரு நாள் லேட்டாக தூங்குவது, இன்னொரு நாள் சீக்கிரம் தூங்குவது என்றிருந்தால், உங்கள் தூக்கத்தின் சுழற்சி பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை நோயால் அவதிபட நேரிடும். ஆகவே தூங்குவதற்கெனவும் நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

பேஷன் மலர் (passion flowers) :

பேஷன் மலர்,மன அழுத்தம் , நரம்புத் தளர்ச்சி, வேலை அழுத்தத்தினால் வரக்கூடிய தூக்கமின்மைக்கு அருமையான தீர்வாகும். இது மூளைக்கு அமைதி தந்து , தூக்கத்தினை எளிதில் தவழச் செய்கிறது. பேஷன் மலர்களை , ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் பருகவும். இந்த மலர் பக்க விளைவுகளற்ற மூலிகையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படி ஒரு இயந்திரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
Next post ஈராக்கில் கார்குண்டு வெடிப்பில் சிக்கி 18 பேர் பலி…!!