குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை…!!

Read Time:2 Minute, 29 Second

காது-குத்து-615x350குழந்தைகளுக்கு காது குத்தும் போது கீழ்வரும் பிரச்சனைகளை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.

* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.

* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன்படுத்தி கழுவவும்.

* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.

* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

* குழந்தை மருத்துவமனைகளில் காது குத்துவது நல்லது.

* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த பீட்ஸாவின் பெட்டியையும் சுவைத்து உண்ணலாம்…?? பார்த்தால் அசந்திடுவீங்க…??
Next post உப்பு, மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!