மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்…!!

Read Time:5 Minute, 51 Second

body_dangerr_006.w540சிறு எறும்பு காதுக்குள் நுழைந்தாலே கதறி கூச்சல் போடுவோர் அதிகம். உடலிலேயே காதுகள் மூடப்படாமல் திறந்தவாறு இருப்பதால், காதுகளில் ஏதேனும் உறுத்தல், அரிப்பு போன்றவை பல நாட்களாக இருப்பின், அதனை சாதாரணமாக விட வேண்டாம்.

ஏனெனில் காதுகளில் சிலருக்கு பயங்கரமான பூச்சிகள் எல்லாம் நுழைந்து அவர்களை பாடாய் படுத்தியுள்ளது. மேலும் காதுகளில் மட்டுமின்றி, கண்களிலும் சிறு தூசி போன்று பூச்சிகளின் முட்டைகள் நுழைந்து, அவை வளர்ந்து சிலரை மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இங்கு இதுவரை மனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமான பூச்சிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் கவனமாக இருங்கள்.

மாமிசத்தில் முட்டை இடும் ஒருவகைப் பூச்சியின் முட்டைப் புழு

92 வயதுடைய ஒரு பெண்மணியின் காதுகளில் மாமிசத்தில் முட்டை இடும் ஒருவகைப் பூச்சியின் 57 முட்டைப் புழு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இந்த முட்டைப் புழு ஊர்ந்து காதுகளுக்குள் சென்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதில் ஓர் மோசமான விஷயம் என்னவெனில், இந்த முட்டைப் புழுவானது, அப்பெண்மணியின் காதுகளுக்கு 2-3 நாட்களுக்குப் பின் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

கிரிக்கெட் பூச்சி

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பல நாட்களாக கடுமையான காது வலியால் அவஸ்தைப்பட்டு வந்தார். மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கும் போது, அவரது காதுகளில் வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த கிரிக்கெட் என்னும் பூச்சி இருப்பது

கரப்பான் பூச்சி

ஆஸ்திரிரேலியாவைச் சேர்ந்த ஒருவர் திடீரென்று காது வலியால் கஷ்டப்பட்டார். அவர் காதுகளில் சிலந்தி தான் சென்றிருக்கும் என்று நினைத்து அதனை வெளியே எடுக்க முயற்சித்தார். ஆனால் முடியாததால், மருத்துவரிடம் சென்று காண்பிக்கும் போது, அவரது காதுகளில் இருந்து 2.5 செ.மீ நீளம் கொண்ட கரப்பான் பூச்சி வெளியே எடுக்கப்பட்டது.

சிலந்தி

ஜியோர்ஜியன் பிரிட்டிஷ் பாடகியான கேட்டி மெலா, தன் காதுகளில் ஏதோ வித்தியாசமான சப்தம் மற்றும் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வது போன்று உணர்ந்தார். ஒரு வாரம் இதை சாதாரணமாக விட்டுவிட்டார். பின் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது, அவரது காதில் இருந்து சிறிய சிலந்தி வெளியே எடுக்கப்பட்டது.

நுரையீரலில் மீன்

இந்தியாவைச் சேர்ந்த சிறுவனுக்கு நண்பர்களுடன் ஆற்றில் விளையாடியப் பின் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அவனது பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்ற போது, அந்த சிறுவனின் நுரையீரலில் 3.5 செ.மீ நீளம் கொண்ட மீன் சிக்கியிருப்பது தெரிய வந்தது. எப்படி என்ற தெரியாமல் இருந்த போது, அச்சிறுவன் நண்பர்களுடன் மீனை விழுங்கும் விளையாட்டை விளையாடியதாக கூறினான்.

கூட்டுப்புழு

5 வயது சிறுவனின் கண்களில் ஓரு வகையான ஒட்டுண்ணிப் பூச்சியின் கூட்டுப்புழு கண்டெடுக்கப்பட்டது. இந்த கூட்டுப்புழுவானது அறுவை சிகிச்சையின் மூலம் கண்களில் இருந்து நீக்கப்பட்டது.

வித்தியாசமான பூச்சி

63 வயதைச் சேர்ந்த தென் கொரிய பெண் ஒருவகை மீனை உட்கொண்ட பின், வாயில் ஏதோ ஒன்று பரவுவது போன்று உணர்ந்தார். இதுக்குறித்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது, அவரது வாயில் சிறிய, வெள்ளை நிற சுழல் வடிவ பூச்சி போன்ற ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

கண்களில் நாடாப்புழு

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரது கண்களில் 20 செ.மீ நீளமுள்ள நாடாப்புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. இந்த புழு குறித்து அந்த மருத்துவர், இந்த புழுக்களின் முட்டைகள், தூசிகள் போன்றோ அல்லது உடலில் உள்ள சிறு காயங்களினாலோ, மனிதர்களின் உடலுக்குள்ளே சென்று, கண்களை அடையும் என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு, துப்பாக்கி சுடப் பயிற்சியளித்த கிட்டு…!!
Next post கார் மோதியதில் ஸ்கூட்டியில் இருந்து பறந்து விழுந்த 2 பெண்கள்: திடுக் வீடியோ..!!