3டி பிரிண்டிங் முறையில் செயற்கை காது, மூக்கு தயாரிப்பு…!!
விபத்தில் காது, மூக்கு உள்ளிட்ட உடல் உறுப்புகள் பறிபோனால் இனி கவலை வேண்டாம். அவற்றை ‘3டி’ பிரிண்டிங் முறையில் செயற்கையாக தயாரித்து பொருத்தலாம்.
விபத்தில் காது, மூக்கு உள்ளிட்ட உடல் உறுப்புகள் பறிபோனால் இனி கவலை வேண்டாம். அவற்றை ‘3டி’ பிரிண்டிங் முறையில் செயற்கையாக தயாரித்து பொருத்தலாம்.
சாலை விபத்து, தீவிபத்து உள்ளிட்ட காரணங்களால் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் கவலையை போக்க தற்போது அதிநவீன ‘3டி’ பிரிண்டிங் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் முறையில் இழந்த உடல் உறுப்புகளான காது, மூக்கு, எலும்பு போன்றவை பாலிஜெட் பிளாஸ்டிக் மூலம் தயாரித்து பொருத்தப்படுகிறது. இதற்கான பணியில் முக எலும்பு சீரமைப்பு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் பிரபலமாக இருந்த இச்சிகிச்சை முறை தற்போது சென்னையிலும் அளிக்கப்படுகிறது. ஜெயந்த் என்ற 14 வயது சிறுவன் விபத்தில் தனது காது ஒன்றை இழந்தான். இதை மறைக்க தொப்பி அணிந்தபடியே இருந்தான்.
சென்னையை சேர்ந்த முக எலும்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான்நேசனை சந்தித்தான். அவரது ஆலோசனையின் பேரில் ஜெயந்துக்கு ‘3டி’ முறையில் விரைவில் செயற்கை காது பொருத்தப்பட உள்ளது.
‘பாலிஜெட் பிளாஸ்டிக்‘கினால் தயாரிக்கப்படும் இந்த செயற்கை காது ஏற்கனவே உள்ள காதின் நிறத்துக்கு மாற்றப்படும்.
பொதுவாக இதுபோன்ற உறுப்புகள் தயாரிக்கும்போது இறந்தவர்களின் உடலில் இருந்தும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மற்றொரு உறுப்பை வைத்தோ மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு உண்மையான உடல் உறுப்பு போன்றே தோன்றும்.
‘3டி’ பிரிண்டிங் செயற்கை முறையில் காது தயாரிக்க ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். அதை 10 நாட்களில் தயாரிக்க முடியும். அதே போன்றும் மூக்கு தயாரிக்கலாம்.
மேலும் எலும்பு தயாரிக்க ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை செலவாகும். இது டைட்டானியம் உலோகம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதற்கும் 10 நாளாகும்.
கல்லீரல் திசு மற்றும் செல்களும் ‘3டி’ முறையில் தயாரிக்கலாம். 12 திசுக்கள் தயாரிக்க 15 நிமிடங்களாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating