வேகமான நடைப்பயிற்சி கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது…!!

Read Time:2 Minute, 38 Second

memory-12-1468323117புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளில் சிகிச்சை தருவதால், நினைவுத் திறன் குறைவாகவே இருக்கும்.

இவர்கள் வேகமாக நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சமீபமாக ஒரு ஆராய்ச்சி சொல்கின்றது.

புற்று நோயாளிகளுக்கு குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பெண்கள் ஞாபக சக்தி குறைந்து காணப்படுவார்கள்.

இது சக்தி வாய்ந்த சிகிச்சைகளினால் உண்டாகிறது.

உணர்வு பூர்வமாக பெண்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் எளிதில் நினைவுத் திறனை இழந்துவிடுகிறார்கள் என்று சிகாகோவில் உள்ள நார்வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வாளர் சியோபென் ஃபிலிப்ஸ் கூறுகிறார்.

இந்த ஆய்வில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை இரு குழுவாக பிரித்தனர். அதில் 1477 பெண்கள் ஒரு குழுவாகவும், 362 பெண்கள் மற்றுரு குழுவாகவும் இருந்தனர்.

இவர்களில் அதிக உடற்பயிற்சி கொடுத்து ஒரு குழுவிற்கும்,இயல்பான வேலைகளுடன் மற்றொரு குழுவையும் கண்காணித்தனர். இதில் அதிக நடை மற்றும் உடற்பயிற்சி செய்தவர்களின் நினைவுத் திறன் அதிகரித்திருக்கிறது.

மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் கூடியிருக்கிறது. மன அழுத்தம் குறைந்ததாக தெரிவித்திருக்கின்றனர். சோதனைக் கருவிகளைக் கொண்டும் அவர்களிடம் ஆய்வு நடத்தியிருக்கின்றனர்.

ஆகவே ஆய்வாளர்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போதிய நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்று உடலுக்கு பயிற்சி அளித்தால், மன அழுத்தம் மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் என்று கூறியிருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கு தெரியுமா?.. விரல் சூப்பினால், நகம் கடித்தால் பலன் உண்டாம்…!!
Next post யாழில் கஞ்சா கடத்திய நபர் கைது:பொலிஸாரின் விசாரணைகள் தீவிரம்…!!