காபி அதிகமாய் குடித்தால் காது கேட்காதா?- இதபடியுங்க…!!

Read Time:3 Minute, 9 Second

liker-12-1468318591காபி அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லதில்லை என நீங்கள் அறிந்ததே . காபி குடிப்பதால் தலைவலி, இதய பாதிப்புகள் போன்றவை வரும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கூடுதலாக காது கேட்கும் திறனையும் இழக்கும் வாய்ப்புகள் உள்ளது என தெரியுமா? ஒரு நாளைக்கு 200 மி.கி.- 400 மி.கி அளவு காஃபின் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதற்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பாவிலுள்ள உணவுப் பாதுகாப்பு குழு 2015 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளது.

மேலும் காபி அதிகமாக குடிப்பவர்கள் விமானம் மற்றும் இசைக் குழுவில் வேலை செய்து வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விமான நிலையம் மற்றும், ட்ரம்ஸ் போன்ற வாத்தியங்கள் இசைக்கக் கூடிய மேற்கத்திய இசைக் குழு நடத்துவர்கள் அதிக சப்தத்தில்தான் வேலை செய்வார்கள்.

மிக அதிக இரைச்சலில் நம் காது, தன்னைத் தானே மூடி காது சவ்வினை பாதுகாத்துக் கொள்ளும். இதைதான் காது அடைக்கிறது என்று நாம் சொல்வோம்.

இது 72 மணி நேரம் வரை நீடித்து பின் இயல்பு நிலைக்கு காது வந்துவிடும்.

ஆனால் தொடர்ந்து இந்த மாதிரியான சப்தங்களில் பணிபுரிபவர்கள், காஃபி பிரியர்கள் என்றால், நிரந்தரமாக காது கேட்காமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சோதனைக்கு உட்படுத்தப்படும் குனியா பன்றியிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர் மேக் கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

பன்றிகளை இரு குழுவாக பிரித்து, ஒரு குழு பன்றிகளுக்கு காஃபி அளித்து, தினமும் 1 மணி நேரம் மேற்கத்திய இசையை கேட்க வைத்தார்கள். மற்றொரு குழுவிற்கு காபி அளிக்காமல் ஒரு மணி நேரம் மேற்கத்திய இசையை கேட்க வைத்தார்கள்.

8 நாட்களுக்கு பிறகு காபி குடித்த பன்றிகள் காது கேட்கும் திறனை இழந்திருந்தது.

இந்த ஆய்வின் இறுதியில், மேக் கில் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்னவென்றால், அதிக இரைச்சலில் வேலை செய்பவர்கள், அதிகமாய் காபி குடித்தால், அவர்கள் கூடிய விரைவில் காது கேட்கும் திறனை இழப்பார்கள் என்று கூறியிருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் தம்பதிக்கு நடந்தது என்ன? வீடியோ
Next post புயலாக பறந்து வந்து கொண்டிருந்த குதிரைகள்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ