நடுரோட்டில் அவதிப்படும் 6 வயது சிறுமி! கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய காட்சி…!! வீடியோ
பல்வேறு மாறுபட்ட சிந்தனைகளையும், பார்வைகளையும் உள்ளடக்கியது தான் இந்த சமூகம். மாடமாளிகையில் வசிப்பவனுக்கு ஒரு அந்தஸ்தையும், வீடற்ற நபருக்கு ஒரு அந்தஸ்தையும் வழங்கும் அலட்சிய மனிதர்களின் கட்டமைப்பில் உருவான இந்த சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதனை கோட்பாடு சார்ந்ததாக பார்ப்பதை விட, சமூகத்தில் ஒரு சோதனை மேற்கொண்டு பார்த்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்.
ஆம், அழுக்கு ஆடைகளோடு வீடற்ற 6 வயது சிறுமி ரோட்டில் நின்றால் அவளை கடந்து செல்பவர்கள் என்ன செய்வார்கள்? என்றும், அதுவே அழகிய ஆடை அணிந்த 6 வயது சிறுமி தனியாக ரோட்டில் என்ன நடக்கும் என்து தொடர்பான சோதனை வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், 6 வயது குழந்தை நட்சத்திரமான Anano, அழகான ஆடைகளை அணிந்து ரோட்டில் நின்றுகொண்டிருக்கிறார், அப்போது அவளை கடந்து செல்லும் சிலர் உனது பெயர் என்ன? வயது என்ன? நீ உனது பெற்றோரிடம் இருந்து தொலைந்துவிட்டாயா? என பல்வேறு கேள்விகளை அவளிடம் எழுப்புகின்றனர்.
அதன் பின்னர், Anano ஆடைகள் மாற்றப்பட்டு, அழுக்கு நிறைந்த ஆடை மற்றும் அவளின் முகம் அழுக்காக்கப்பட்டு அதே இடத்தில் நிற்கவைக்கப்படுகிறார், ஆனால் அவளை கடந்து செல்லும் பலரும் அவளை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
அதன்பின்னர் உணவகம் ஒன்றிற்குள் அழகிய ஆடையுடன் செல்லும் Anano- வை பலரும் கூப்பிட்டு, தங்களுடன் உள்ள உணவுகளை பகிர்ந்துகொள்கின்றனர், ஆனால் அழுக்கு ஆடையுடன் அதே உணவகத்திற்குள் Anano செல்லும்போது, யாரும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளாமல் இங்கிருந்து சென்று விடு என்று கூறுகின்றனர்.
அதன் பின்னர் வெளியே வரும் Anano- என்னுடைய ஆடை அழுக்காக இருப்பதால் எல்லோரும் என்னை விரட்டுகின்றனர், ஆனால் ஏன் இவ்வாறு இவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என கூறுவதோடு வீடியோ நிறைவுபெறுகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் நாமும், இந்த உலகில் அன்றாடம் மில்லியன் கணக்கான குழந்தைகள் தனிமையில் விரட்டியடிக்கப்படுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Average Rating