நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்…!!
Read Time:1 Minute, 24 Second
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமலை விடுதலை செய்யுமாறு கோரி இன்று போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்காலை நகரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாமல் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி பௌத்த விஹாரைகளில் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating