ஆண்கள் சேவிங் செய்யும் முன் இதை கவனிங்க..!!

Read Time:2 Minute, 22 Second

201607271318572406_men-do-know-about-shaving_SECVPFஆண்கள் ஷேவிங் செய்யும் முன், முகத்தை சுடுநீரில் கழுவி, துணியால் துடைக்காமல் அப்படியே விட வேண்டும். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து, ஷேவிங் செய்யும் போது ஈஸியாக முடி வெளிவந்துவிடும்.

* பின் ஷேவிங் ஜெல்லை முகத்தில் தடவி 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், ஷேவிங் க்ரீம் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, ஷேவிங் செய்யும் போது முடி எளிமையாக வெளிவரவும் உதவும். ஒருவேளை உங்களுக்கு தாடி அதிகம் இருந்தால், ஷேவிங் க்ரீமை அதிகம் தடவி ஊற வையுங்கள்.

* அடுத்து ஷேவிங் மிஷின் கொண்டு, வளைவுகள் அதிகம் உள்ள இடங்களில் ஷேவிங் செய்யாமல், முதலில் மேடு பள்ளங்கள் இல்லாத கன்னங்களில் ஷேவிங் செய்ய வேண்டும், இதனால் கடினமான இடங்களில் உள்ள முடி ஷேவிங் க்ரீம்மில் நன்கு ஊறி, ஷேவிங் செய்யும் போது பின் ஈஸியாக வந்துவிடும். இதனால் சருமத்தில் எவ்வித வெட்டுக் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.

* ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும். பின் ஷேவிங் செய்த பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஆஃப்டர் ஷேவ் தடவி, சருமத்தில் ஈரப்பசையூட்டினால், சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

* முக்கியமாக ஷேவிங் செய்து முடித்த பின்னர், வீட்டில் கற்றாழை இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை மரப்பெட்டிக்குள் பூட்டி வைக்கும் தாய்: காரணம் என்ன..!! (வீடியோ)
Next post கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தையின் அட்டகாசம்..!! (வீடியோ)