முகத்தில் பருக்களைப் போக்க ஐஸ் கட்டி போதுமாம்…!!

Read Time:4 Minute, 51 Second

ice_girl_002.w540முகத்தில் திடீரென ஏதேனும் பிம்பிள் அதாவது பரு எட்டிப் பார்த்துவிட்டால் போதும், உடனே டென்சன் ஏற்பட்டு, இதனை விரைவில் போக்க வேண்டும் என்று நிறைய அழகுப் பொருட்களை பயன்படுத்துவோம்.

ஆகவே அவ்வாறு பயன்படுத்தினால், பிம்பிள் போவதற்கு 2-3 நாட்கள் ஆகும். அதிலும் பிம்பிளை போக்குவதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்கள் சிலவற்றால் பிம்பிள்கள் கரும்புள்ளிகள் போன்று தோன்றும்.

ஆகவே அவை ஏற்படாமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்களான கடுகு, கிராம்பு, சந்தனக்கட்டை அல்லது மூல்தானி மெட்டி ஆகியவற்றை பயன்படுத்தினால், அந்த பிம்பிள்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போய்விடும்.

ஆனால் அதுவே ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், ஒரே நாளில் அவை குறைந்துவிடும். அத்தகைய ஐஸ் கட்டியை பயன்படுத்தும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!!

ஸ்டெப் 1- முதலில் முகத்தை ஃபேஸ் வாஷ் வைத்து நன்கு கழுவ வேண்டும். ஆனால் முகத்தில் இருக்கும் பிம்பிளை மட்டும் தேய்த்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு தேய்க்கும் போது, அதில் உள்ள சீல் முகத்தில் பரவி, நிறைய பிம்பிள் வந்துவிடும். ஆகவே முகத்தை வெதுவெதுப்பான நீரால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி லேசாக கழுவ வேண்டும்.

ஸ்டெப் 2- மூல்தானி மெட்டியை, சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். வேண்டுமென்றால் பிம்பிள்கள் மீது மட்டும் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் முகத்தில் உள்ள பிம்பிளையும் குறைத்துவிடும்.

ஸ்டெப் 3- இந்த ஃபேஸ் பேக் போட்டு கழுவியவுடன், 5 நிமிடத்திற்கு ஐஸ் கட்டிகளை வைத்து, பிம்பிள் உள்ள இடத்தின் மீது தேய்க்கவும். இல்லையென்றால், ஐஸ் கட்டிகளை எந்த ஒரு ஃபேஸ் பேக் இல்லாமலும், தேய்க்கலாம். அதிலும் ஐஸ் கட்டிகளை வைத்து, தேய்க்கும் போது, குறைந்தது 2 ஐஸ் கட்டிகளையாவது பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சி பிம்பிளில் உள்ள அனைத்தையும் ஒரே நாளில் உருக்கிவிடும். வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முறை, இவ்வாறு தேய்த்தால், பிம்பிள் முற்றிலும் போய்விடும்.

ஸ்டெப் 4- ஐஸ் மசாஜ் செய்தப் பின்னர், சுத்தமான துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். அதனால் பிம்பிளில் உள்ள சீல் முற்றிலும் துணியில் வந்துவிடும். பிறகு கண்ணாடியைப் பாருங்கள், பிம்பிள் குறைந்து முகம் அழகாக இருக்கும்.

குறிப்பு: பிம்பிள் வராமல் இருக்க வேண்டுமென்றால் நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் இது யாருக்கும் தெரியாது. வறட்சியின் காரணமாகத் தான் முகத்தில் பிம்பிள், முகப்பரு ஏற்படுகின்றன. அதிலும் காப்பியை அதிகம் குடிக்கக் கூடாது. ஏனெனில் காப்பியில் உள்ள காப்பைன் உடலில் உள்ள நீர் வறட்சியை ஏற்படுத்தும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றில் வலியா, ஒரே எரிச்சலா?.. போக்குவதற்கு எளிமையான டிப்ஸ்…!!
Next post இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்க சிலரால மட்டும் தான் முடியும்..!! வீடியோ