உலகின் குள்ளமான ஜோடியின் 8 வருட காதல் வாழ்க்கை, திருமணத்தில் முடிகிறது..!!
கட்யுசியாஹோசினோ மற்றும் பவ்லோ கேபிரியல் டி சில்வா இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள். சமூகவலைத்தளம் ஒன்றின் மூலம் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
முதலில் நட்பு பாராட்டவே மறுத்து ஒதுங்கி சென்றதாக கூறும் கட்யுசியா, பின்னர் பவ்லோவின் குணம் தன்னை ஈர்த்ததாகவும், அதனையடுத்து 18 மாதங்களுக்கு பின்னர் அவரது காதலை ஏற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்.
இதனிடையே, சாட்டிங் மூலமாக பேச ஆரம்பித்த 2 மாதங்களிலேயே இருவருக்கும் நேரில் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பவ்லோ தனது வாகனத்தில் 186 கி.மீ. தூரம் தனியாக பயணம் மேற்கொண்டு கட்யுசியாவை சந்தித்துள்ளார்.
பின்னர் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட முடிவின்படி தற்போது ஒரே வீட்டில் தங்கி வருகின்றனர். இருப்பினும் திருமணம் செய்து கொண்ட பின்னரே குழந்தைகள் குறித்து ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
Average Rating