காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழி… காபியில் விஷம் கலந்து கொலை செய்த இளம்பெண்..!! வீடியோ

Read Time:4 Minute, 35 Second

coffee_friend_002.w540இந்தோனேசியா ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின் மற்றும் ஜெசிகா வாங்சோ இருவரும் தோழிகள். 7 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்து உள்ளனர். இருவரும் சிட்னியில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றுள்ளனர். மட்டுமின்றி ஒன்றாகவே தங்கியுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மிர்னா தமது தோழியின் நலன் கருதி, அப்போது அவர் காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி உள்ளார். மேலும் தங்களுக்குள் இருக்கும் உறவை கைவிட கோரியதாகவும், மிர்னா கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த வாங்கோ மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இதனையடுத்து மிர்னா தமது தோழியிடம் இருந்து விலகியே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்பேதும் இல்லாத மிர்னாவிடம் மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட வோங்சோ, மிர்னாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

இதை தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள தமது தோழி பூன் ஜுவிடா என்பவருடன் இணைந்து வாங்சோ மிர்னாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

ஒரு ஓட்டலில் இருவரும் சந்திக்க வாங்சோ மிர்னாவை அழைத்து உள்ளார். மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபி ஒன்றை ஆர்டர் செய்து வரவழைத்து அதில் விஷம் கலந்து வைத்திருந்துள்ளார் வோங்சோ. மிர்னா வந்து சேர்ந்ததும் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் குறிப்பிட்ட கோப்பையை மிர்னாவிடம் நீட்டி குடிக்க வைத்துள்ளார்.

ஆனால் ஒரு வாய் மட்டுமே அந்த காபியை அருந்திய மிர்னா, அதில் வேறுபட்ட சுவை கலந்திருப்பதை உணர்ந்து மேலும் அருந்த மறுத்துள்ளார். ஆனால் அருந்திய அந்த ஒரு வாய் காபியே அவரது உயிரை பறிக்க போதுமானதாக இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண், ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஜெசிகோ வாங்சோ தற்போது விசாரணையை சந்தித்து வருகிறார்.

இச்சம்பவத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே வாங்சோ தனது காதல் முறிவாலும், தோழியின் பிரிவாலும் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது முன்னாள் காதலின் வாகனத்தை சூறையாடியுள்ளார், மது போதையில் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.

தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆஸ்திரேலிய போலீசார் ஜகார்த்தா விசாரணை அதிகாரிகளுக்கு அளித்துள்ள ஆவணங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்ட வாங்சோ தற்போது மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கில் அவரை மேற்கொண்டு குற்றவாளியாக்கி தண்டிக்க முடியாது எனவும் ஆஸ்திரேலியா அதிகாரிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாப் போச்சு : வீடியோவைப் பாருங்க..!!
Next post ஆட்டோ மீது முறிந்து விழுந்த தென்னைமரம்: ஒருவர் பலி, மூவர் படுகாயம்..!!