வழிந்தோடி வரும் எரிமலைக்குழம்பு அருகில் ஜாலியாக நீச்சல் அடித்த இளம் பெண்..!! வீடியோ
ஹவாய் தீவில் உள்ள கிலியாவோ எரிமலை குழம்பைக் கக்கி வருகிறது. அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் சர்ப் போர்டில் ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் படு நெருக்கமாக அந்த லாவா ஆறுக்கு அருகே போய் வந்துள்ளார்.
கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் போய் திரும்பியுள்ளார் ஆலிசன். அதை தனது பேஸ்புக்கிலும் போட்டுள்ளார்.
இந்த துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் தனது கேமராவில் கிளிக்கியுள்ளார். கொதிக்கும் லாவாவில் சிக்கினால் அவ்வளவுதான் சாம்பல் கூட மிஞ்சாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலிசன் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் ஆவார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating