ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்குபவரா நீங்கள்?

Read Time:2 Minute, 34 Second

sleeping_girl_002.w540ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு ஞபாகமறதி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கம் நமது நினைவுத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எவ்வளவு மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினாலும், இரவு நன்கு தூங்கி அதிகாலை எழுந்தவுடன் நினைவுத்திறன் அதிகரிப்பதை நம்மால் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

நினைவுத்திறன், கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை இயக்குவது மூளையின் ஹிப்போ கேம்பஸ் (Hippocampus) என்னும் பகுதி.

15 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வில் நாம், பேசியது, நம் கண்கள் எதிராளியைப் பார்த்த கோணம், சுற்றி இருந்த மனிதர்கள், மரங்கள் மற்றும் செடிகள் எனக் காட்சிகள் திரைப்படம் போல நம் நினைவில் பதிந்திருக்கும். அதற்கு முக்கியக் காரணம் ஹிப்போகேம்பஸில் இருந்து வரும் அதிர்வலைகளால் செயல்படும் நியூரான்களின் தகவல் பரிமாற்றம்தான்.

நமது அன்றாடச் செயல்களையும், வழக்கமற்ற நிகழ்வுகளையும் ஹிப்போகேம்பஸ் நியூரான்கள் சேமித்துக்கொள்ளும். இந்தத் தகவல்களே பின்னாட்களில் நமக்குத் தேவைப்படுபோது நினைவில் தோன்றும். பல வருடங்களுக்கு முன்னர் சென்ற இடங்களுக்கு செல்லும்போது, முந்தைய நினைவுகளை வரவழைக்கும். செல்போனில் ரிமைண்டர் வைத்தது போல, சில வேளைகளில் நமது முக்கியப் பணிகளைத் தக்க நேரத்தில் ஞாபகப்படுத்தும்

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்…!!
Next post பெண்ணின் சடலம் மீட்பு – தீவிர விசாரணையில் பொலிஸார்..!!