ஜனாதிபதி மைத்திரி 6 மாதத்தில் இறந்து விடுவதாக கூறிய ஜோதிடருக்கு நேர்ந்த கதி…!!

Read Time:2 Minute, 51 Second

download-1நேற்றைய தினம் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட விடயம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்னும் 6 மாத்திற்குள் உயிரிழந்து விடுவார் என்றும், அதற்கு பிறகுகோத்தபாய ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என பிரபல ஜோதிடரான விஜித் ரோஹனவிஜயமுனி ஆருடம் தெரிவித்த விடயமாகும்.

இவரது இந்த ஆருடத்தை அடுத்து இவர் விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வுபிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைகளுக்கு வருமாறு தொலைபேசி மூலம்அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் கூறியது கணிப்பு மாத்திரமே எனவும், தான் எதற்கும் அஞ்சப் போவதில்லைஎன்றும் தெரிவித்துள்ள இவர் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை துப்பாக்கியின்பின்புறத்தால் தாக்கியதால் பல மாதங்கள் சிறைச் சோறு சாப்பிட்டதால் மீண்டும்சிறை செல்ல அஞ்சவில்லை என்றும், உண்மையை சொல்ல பயப்படப் போவதில்லை என்றும்ஜோதிடர் விஜித் ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இவரது இந்த ஆருடத்தின் பின்னர் நுகேகொட பிரதேசத்தின் பிரபல அரசியல்வாதிஒருவரின் ஆதரவாளர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் இவர்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மைத்திரி 6 மாத்தில் இறக்கமாட்டார் என மற்றுமொரு ஜோதிடரான இந்திகதொட்டவத்த தெரிவித்துள்ளார்.

விஜித் ரோஹன சாதாரண வானொலிக் கடை ஒன்றின் உரிமையாளர் என்றும், இவர் ஜோதிடர்இல்லை என்றும் இந்திக குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
Next post பருமனான பெண்ணாக மாற இப்படியா பண்ணுவாங்க ; அதிர்ச்சி தகவல்..!!