யாழில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு…!!

Read Time:2 Minute, 52 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர் இளவாலை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய முதியவரொருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுக்குடியிருப்பு-வெளிக்கண்டல் பாலத்திற்கு கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் தர்மபுரம் பொலிஸாரினால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்க நபர் என்றும் உறவினர்களினால் அடையாளப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு குறித்த பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றுக்காக சிகிச்சையின் பொருட்டு இருவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான இருவரும் தாம் நாயுடன் அடிபட்டதாக பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பாலத்திற்கு கீழிருந்து மீட்கப்பட்ட சடலம் குறித்தும், விபத்துக் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தர்மபுரம் பொலிஸார் கூறியுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனை மெச்சுகிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன…!!
Next post மாணிக்கம் என கருங்கல்லை கொடுத்து ஏமாற்றிய பெண்…!!