ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி…!!
சூரியவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியை தனது தாயாருடன் பாடசாலைக்கு வருமாறு ஆசிரியை தெரிவித்துள்ளார். எனினும் மாணவியின் தாயார் தவிர்க்க முடியாத காரணத்தினால் பாடசாலைக்கு செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவி தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் உண்மைக்கு புறம்பானவை என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி
Average Rating