சாரதியின் அசமந்த போக்கினால் அவசர சிகிச்சைப் பிரிவில் இரு பெண்கள்…!!
கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று பி.ப 4.00 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் வாகன சாரதியின் அசமந்த போக்கினால் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற பெண்கள் இருவர், முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் வாகன சாரதியின் அசமந்த போக்கினால் வீதி விதிகளின் கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating