விஷ்ணுவிஷால்-பார்த்திபன் நடிக்கும் மாவீரன் கிட்டு டப்பிங் தொடங்கியது…!!
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாவீரன் கிட்டு’. இதில் விஷ்ணு விஷால், பார்த்திபன் ஆகியோருடன் ஸ்ரீதிவ்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படத்தொகுப்பு நிறைவடைந்து இப்போது படத்துக்கான டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது. “மாவீரன் கிட்டு” திரைப்படத்தின் முதல் போஸ்டர் அக்டோபர் 1-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்களும் அடுத்த மாதம் வெளியாகிறது. ‘மாவீரன் கிட்டு’ திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
இதற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வசனம், பாடல்-யுகபாரதி, இதை ஏசியன் கம்பைன்ஸ், நல்லுசாமி பிர்சர்ஸ் சார்பில் ஐஸ்வர் வி.சந்திரசாமி-டி.என்.சாய் சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating