தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்கு…!!

Read Time:2 Minute, 58 Second

girls-going-alone-to-the-attention_secvpf-585x333பெண்கள் தனியாக வெளியூர் பயணம் செய்யும் போது மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும்.

பெண்கள் வெளியூர்களுக்கு தனியாக பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் பெண்களுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன.

வெளியூர் செல்லும் இடங்களில் பெண்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் வெளியூர் செல்லும் போது மிகவும் கவனமாகவும், பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

* ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

* வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக இரவு பயணத்தை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

* வெளியூர் பயணத்தில் போது தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.

* செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின் மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும்.

* ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின் எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள். மேலும் அந்த நபர் சந்தேகப்படும் வகையில் இருந்தால் அந்த வாகனத்தில் ஏறுவதை தவிர்த்து விடுவது நல்லது.

* அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அறிமுகமற்றவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

* தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள் கைவசம் வைத்துக் கொள்ளவும். (இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்).

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் என்றால் சும்மாவா? வியக்க வைக்கும் கல்லூரி மாணவிகள்…!! வீடியோ
Next post யாழ். வைத்தியசாலை மருத்துவ நிபுணர் அரவிந்தன் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்…!!