வாணியம்பாடி அருகே இளம்பெண் கழுத்தறுத்து கொலை…!!

Read Time:2 Minute, 46 Second

201609221320395603_young-woman-murder-near-vaniyambadi_secvpfவாணியம்பாடி அடுத்த முல்லை ராணிப்பேட்டை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் பிணம் கிடப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.

துணை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது மலை அடிவாரத்தில் உள்ள முட்புதரில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். உடலை போலீசார் பார்வையிட்டனர்.

அப்போது, இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் மற்றும் நக கீறல்கள் இருந்தது.

கொலை நடந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி. சற்று தொலைவில் விவசாய நிலங்கள் மட்டுமே உள்ளன. குடியிருப்பு பகுதிகள் இல்லை.

இப்படிப்பட்ட இடத்திற்கு அந்த பெண் எப்படி வந்தார்? அவரை கொலை கும்பல் கடத்தி வந்தனரா? அல்லது அறிமுகமான நபர்கள் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனரா? என்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொலையான பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தகவல்களும் தெரியவில்லை. பருமான உடல் அமைப்பை கொண்டவராக உள்ளார்.

நீல நிற சேலை அணிந்துள்ளார். கொலைக்கான ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் மது போதையில் தகராறு: குடிகார கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி…!!
Next post பெண்கள் என்றால் சும்மாவா? வியக்க வைக்கும் கல்லூரி மாணவிகள்…!! வீடியோ