செல்போன் தீப்பிடித்தது: சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் பீதி…!!

Read Time:2 Minute, 10 Second

201609232213524377_smoke-frm-samsung-mobile-creates-panic-inside-indigo_secvpfசிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை நோக்கி இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சென்னையை நெருங்கியபோது விமானத்திற்குள் புகை வெளியேறும் வாசனையை சில பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர் வந்து சோதனை செய்தபோது ஒரு பயணியின் கைப்பையில் இருந்த சாம்சங் மொபைலில் இருந்து லேசான புகை வருவது கண்டறியப்பட்டது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. உடனே இதுபற்றி விமானிக்கு தெரியவந்ததும், அவர் விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு நிலைமையை விளக்கினார்.

அதேசமயம், புகை வந்த மொபைல் அப்புறப்படுத்தப்பட்டு தண்ணீரில் அமிழ்த்தி செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. விமானம் குறித்த நேரத்தில் சென்னையில் தரையிறங்கி விமானிகள் வழக்கமான நடைமுறைகளின்படி இறக்கப்பட்டனர்.

செல்போன் தீப்பிடித்த சம்பவத்தை இண்டிகோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் விழிப்புடன் இருந்து விமான ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்கள் வெண்மையாக பளிச்சிட சூப்பரான டிப்ஸ்…!!
Next post மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது: 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற உத்தரவு…!!