ஆத்தூர் அருகே குடிபோதையில் மகனை அடித்து கொன்ற தந்தை…!!

Read Time:4 Minute, 58 Second

201609240958386248_father-beat-son-kills-near-attur_secvpfசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 68). இவரது மனைவி உண்ணாமலை. இவர்களது மகன் மாரிமுத்து(46).

இந்த நிலையில், தந்தை பச்சமுத்துக்கும், மகன் மாரிமுத்துக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இருவரும் மது குடித்து விட்டு வந்து போதை தலைக்கேறிய நிலையில் அடிக்கடி மாறி, மாறி தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

இதைப்போல் நேற்று இரவும் தந்தையும், மகனும் மது குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தனர். பின்னர் வழக்கம் போல் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவருடைய ரகளையை பார்த்ததும், பயந்து போன உண்ணாமலை பக்கத்து வீட்டுக்கு தூங்க சென்றார்.

நீண்ட நேரமாக வாய் தகராறில் ஈடுபட்டு வந்த தந்தையும், மகனும் ஒரு கட்டத்தில் திடீரென ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, கோபம் அடைந்த பச்சமுத்து வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து வந்து மகன் மாரிமுத்துவின் தலையில் ஓங்கி அடித்தார். மேலும், விடாமல் சரமாரியாக தலையில் அடித்தார்.

இதில், மாரிமுத்து நிலை குலைந்து கீழே சரிந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடலில் இருந்து உயிர் பிரிந்தது. மகன் இறந்து விட்டதை உறுதி செய்த பின் பச்சமுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தெடாவூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பச்சமுத்து மீது கொலை வழக்குப்பதிவு செய்து, போலீசார், அவரை கைது செய்ய வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட மாரிமுத்துக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆன பிறகு, இருவரும் சில காலம் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். அதன் பிறகு தான் மாரிமுத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த மனைவி, கணவருடன் வாழ்வதை விட பிரிந்து சென்று வாழ்வதே மேல் என்று கருதி, மாரிமுத்துவை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த மாரிமுத்து மேலும் மது குடிக்க ஆரம்பித்தார். அவருடன் தந்தை பச்சமுத்தும் சேர்ந்து கொண்டார். இருவரும் மது குடித்து விட்டு வந்து, தினமும் ரகளை செய்து வந்தனர். தினமும் தாய் உண்ணாமலையை அடித்து உதைப்பதால் பயத்தில் அவர் பக்கத்து வீட்டிற்கு தூங்க சென்று விடுவார்.

இதுபோல் தாய் உண்ணாமலை பக்கத்து வீட்டுக்கு நேற்று இரவு தூங்க சென்ற நேரத்தில் தான் மகன் மாரிமுத்துவை தந்தை உலக்கையால் அடித்துக் கொன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஷிங்டன்: வணிக வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை – கொலையாளி தப்பியோட்டம்…!!
Next post யாழ். கோப்பாய் சம்பவம்- தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை என்று குறிப்பிடப்படும் நபர், சிறுமியின் தந்தை இல்லை -முழுமையான விபரங்களுடன்!! (தந்தையின் வாக்குமூலம் வீடியோ)