ஆலங்குளம் அருகே மனைவி- மகளை வெட்டி சாய்த்து விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை…!!

Read Time:3 Minute, 30 Second

201609241707370893_family-dispute-farmer-suicide-near-alangulam_secvpfஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 60). விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள் (55). இவர்களது மகள் கவுசல்யா (28). கவுசல்யாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு முருகன் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகன் ஆலங்குளத்தில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கவுசல்யாவிற்கும், முருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் கவுசல்யா கணவரை பிரிந்து மருதப்பபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். குழந்தைகள் இருவரும் முருகனுடன் உள்ளனர்.

கணவரை பிரிந்து மகள் வீட்டில் இருப்பதால் விநாயகம் மனவேதனை அடைந்தார். இதனால் அடிக்கடி மது குடித்துள்ளார். நேற்று இரவும் மது போதையில் விநாயகம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கவுசல்யாவை முருகனுக்கு திருமணம் செய்து வைக்க தனது மனைவி செல்லம்மாள் தான் காரணம் என கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அவர் செல்லம்மாளை சரமாரியாக அடித்து உதைத்தார். பதிலுக்கு செல்லம்மாளும் விநாயகத்தை தாக்கினாராம். இதில் ஆத்திரம் அடைந்த விநாயகம் அரிவாளை எடுத்து செல்லம்மாளை வெட்டினார். அதை தடுக்க வந்த மகள் கவுசல்யாவையும் வெட்டினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்லம்மாள் மற்றும் கவுசல்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் வீட்டில் இருந்த விநாயகம் மனைவி, மகளை வெட்டியதால் வேதனை அடைந்தார். அதனால் அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று விநாயகத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் மனைவி, மகளை வெட்டிய விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராயபுரம் அருகே வி‌ஷ ஊசி போட்டு நர்சு தற்கொலை…!!
Next post எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை:விஜய் யேசுதாஸ் மனைவி…!!