கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் 30 பேர் கைது…!!

Read Time:2 Minute, 23 Second

201609241618210271_hindu-munnani-members-30-person-arrest-in-eroder-district_secvpfகோவை அருகே உள்ள துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36), கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளரான இவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் கடைஅடைப்பு, இறுதி ஊர்வலத்தில் வன்முறை, மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

திருப்பூர் மாவட்டத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடந்தது. மற்றும் 15 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதுபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, புளியம்பட்டியிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. 3 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. புளியம்பட்டியில் நேற்று பஸ்கள் மற்றும் எந்த வாகனங்களும் ஓடவில்லை.

ஈரோட்டில் நேற்று இந்து முன்னணி சார்பில் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவங்களையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 30பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்று போலீசார் கூறி உள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை:விஜய் யேசுதாஸ் மனைவி…!!
Next post எதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு…. ஆவியின் வேலையாக இருக்குமென அச்சத்தில் மக்கள்…!! வீடியோ