ஒரு அழகான பெண்ணுக்கு சேட் பண்றது குத்தமா?.. இப்படி கம்பி எண்ண வைச்சிட்டாங்களே…!! வீடியோ

Read Time:2 Minute, 17 Second

girl_chat_boy_001-w245அமெரிக்க இளம் பெண்ணுடன் நெறிமுறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக கூறி சவுதி இளைஞனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரும் எதிர்மறையான எண்ணத்தை தூண்டும் வகையில் சமூகவலைத்தளத்தில் நடந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் குடியிருக்கும் அபு சின் என்ற சிறுவன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடியிருக்கும் 21 வயதான கிறிஸ்டீனா என்பவருடன் நேரலையில் சேட் செய்துள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவெனில் கிறிஸ்டீனா பேசும் ஆங்கிலம் அபு சின் என்பவருக்கு புரியவில்லை. அபு சின்னுக்கு அரேபிய மொழி மட்டுமே பேசத்தெரியும்.

ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் மொழி மறந்து சுவாரசியமாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பல ஆயிரம் பேர் பார்த்து தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே வைரலான இந்த வீடியோவை பார்த்து சவுதி பொலிசார் கடந்த ஞாயிறு அன்று அபுவை கைது செய்துள்ளது. கைது செய்யப்படும்போது குவைத்தில் உள்ள இன்னொரு நண்பருடன் அபு தனது வாகனத்தில் வைத்து இதுபோன்று பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சவுதி அரசு இதுபோன்று பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகளையும் அந்த அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச பட தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினர் கைது…!!
Next post கபாலி படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது என்ன நடவடிக்கை: ஐகோர்ட்டு கேள்வி…!!