கவுதம் கார்த்திக்கு கைகொடுத்து உதவிய சூர்யா…!!
ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கான தலைப்பு தேர்வு சமீபகாலமாக நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான தலைப்பு உறுதியாகியுள்ளது.
இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகரை வைத்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, சூர்யா இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘இவன் தந்திரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு சூர்யா தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் என்ற கன்னட நடிகை ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்ச்சனாஸ்ரீ, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடிக்கவிருக்கின்றர்.
நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அபிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
Average Rating