பெண் வயாக்ரா அறிமுகம், ஆனால் கடும் எச்சரிக்கை..!!

Read Time:2 Minute, 39 Second

vikiraபாலியல் இச்சை குறைவாக உள்ள பெண்களுக்கு அதை மருத்துவ ரீதியில் அதிகரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாத்திரையை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் இச்சை குறைவாக உள்ள பெண்களுக்கு அதை மருத்துவ ரீதியில் அதிகரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாத்திரையை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரை கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை

இருந்தபோதும், அட்யி என்ற வர்த்தகப் பெயருடைய அந்த மாத்திரையால், கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, மதுவுடன் இந்த மாத்திரையை உட்கொண்டால் பக்க விளைவுகள் மிகக் கூடுதலாக இருக்கக் கூடும் எனவும் அந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

பெண்களின் பாலியல் இச்சை, உடல் நலத்தின் முக்கியமான ஒரு பகுதி என்பது இப்போது சட்டபூர்வமாகியுள்ளது என்று இந்த மாத்திரை சந்தையில் அறிமுகமாவதை வரவேற்றுள்ள அமெரிக்க நுகர்வோர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ஆனால் மற்றொரு நுகர்வோர் அமைப்போ, இந்த மருந்தானது பெண்களின் உடல் நலத்துக்கு கடுமையான அபாயத்தை ஏற்படுத்தக் கூடும், இந்த மாத்திரை அவர்களுக்கு மிகவும் குறைவான அனுகூலத்தையே கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளது.

பெண் வயாக்ரா என்று அழைக்கப்படும் இந்த மாத்திரை தினமும் உட்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், அது ஆண்களின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது போலன்றி, பெண்களின் மூளையிலுள்ள இரசாயனங்கள் மீது செயலாற்றி வேண்டிய பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகிகளைப்பற்றி ஆபாசப் பேச்சு: மன்னிப்பு கேட்டார், டொனால்ட் டிரம்ப்…!!
Next post நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை: ஸ்ரீதிவ்யா…!!