மாதவனுக்கு வில்லனாக ரஜினி பட வில்லன்…!!
விமல் நடித்த ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். மாதவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த ‘இறுதிச்சுற்று’ படம் வெற்றி பெற்றுள்ளதால், இப்படத்தையும் வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்று சற்குணமும், மாதவனும் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
இறுதிச்சுற்று படத்துக்காக உடல் எடையை கூட்டிய மாதவன், இப்படத்திற்கு தனது உடல் எடையை குறைக்கப் போகிறாராம். இதற்கிடையில், இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரையும் நடிக்க வைக்கப்போவதாக கூறப்படுகிறது. காமெடிக்கு சூரியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தாய்லாந்தில் தொடங்கி நேபாளம், மகாராஸ்டிரா, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
Average Rating