பிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்…!!
Read Time:1 Minute, 10 Second
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பெல்ஜியம் நோக்கி சென்றுள்ளார்.
எமிரேட் விமானச்சேவைக்கு சொந்தமான EK349 என்ற விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் 8 தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 3:15 மணிக்கு இலங்கையில் இருந்து பெல்ஜியம் நோக்கி சென்றதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விஜயத்தின் போது இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரதமரின் இவ் விஜயத்தின் போது, பெல்ஜியம் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating