உடல்நிலை பற்றி காஸ்ட்ரோ வெளியிட்ட தகவல்

Read Time:1 Minute, 39 Second

castro_80-B.Day.jpgகிïபா நாட்டு அதிபர் காஸ்ட்ரோவின் 80-வது பிறந்தநாளை அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். தன்பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டு உள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதோடு வயிற்றில் நடந்த ஆபரேஷனுக்கு பிறகு எடுக்கப்பட்ட அவரது போட்டோக்களும் வெளியாகி உள்ளன.

ஒரு போட்டோ அவரது பிறந்த நாள் மலரை கம்ïனிஸ்டு கட்சிப்பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளது.அதை அவர் கைகளில் வைத்து இருப்பது போன்று எடுக்கப்பட்ட போட்டோவும் ஒன்று ஆகும்.

என் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது. முழுவதும் குணமாகிவிடவில்லை. விரைவில் குணமாகிவிடுவேன் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்னால் அது பொய்யாகும். நம்பிக்கையுடன் இருங்கள். அதே நேரத்தில் கெட்டசெய்தியையும் கேட்கத்தயாராக இருங்கள் என்று அவர் கூறி இருக்கிறார்.

காஸ்ட்ரோவின் உடல்நிலை பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. அவர் குணமாகி வீடு திரும்பினாலும் அரசு அலுவல்களை தொடர்ந்து கவனிக்க முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

castro_80-B.Day.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் புயலுக்கு பலி 300 ஆக உயர்வு
Next post முஸ்லிம் பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாற கோர்ட்டு அனுமதி அளிக்குமா? மலேசியாவில் சர்ச்சை