இன்று முதல் நாடு முழுவதும் மின்வெட்டு – நேர அட்டவணையினை வெளியிட்ட மின்சார சபை..!!

Read Time:3 Minute, 3 Second

625-256-560-350-160-300-053-800-461-160-90இலங்கையில் 3 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று முதல் மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாக மிசாரசபை மேலும் கூறியுள்ளது.

இதன்படி காலை வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் ( காலை 8 மணிமுதல் 10.30 வரைக்கும் )மின்சார தடைப்படும் எனவும் ,

இரவு வேளையில் 6 மணிமுதல் 10 மணிக்குள் ஒரு மணித்தியாலமும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.

உரிய மழைவீழ்ச்சி இன்மையாலும், நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை ஆகியவையே இதற்கான காரணங்கள் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் மின்வெட்டு? மின்சார சபை எச்சரிக்கை

இன்று தொடக்கம் நாட்டினுள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை எச்சரிக்கை செய்துள்ளது.

நேற்று முன்தினம் கொத்மலை தொடக்கம் அநுராதபுரம் வரையில் மின் கடத்தும் அதிசக்தி வாய்ந்த மின்வடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அதிகூடிய கொள்ளளவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் கருவிகள் செயலிழந்து போயிருந்தன.

தானியங்கி நிறுத்தல் கருவிகளின் திடீர் செயற்பாடு காரணமாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவி கடத்தப்படும குழாய் உள்ளிட்ட முக்கிய உற்பத்தித் தொகுதி பழுதடைந்துள்ளது.

இதனை சீரமைக்க சில நாட்கள் செல்லும் என்று கருதப்படுகின்றது. இதன் காரணமாக நாளாந்த மின்பாவனைக்கு நுரைச்சோலையில் இருந்து வழங்கப்பட்ட 300 மெகாவொட் மின்சாரத்தின் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்வெட்டு தவிர வேறு வழியே இல்லாத நெருக்கடிக்கு மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது. எனவே இன்று தொடக்கம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெட்டி அணிவதன் அறிவியல் ரகசியம்…!!
Next post ஜனாதிபதி மைத்திரிக்கு பலத்த பாதுகாப்பு…!!