காதலியின் மோசமான நடவடிக்கைகள்…!!

Read Time:3 Minute, 36 Second

14857-585x537பொறாமை என்பது ஒரு மோசமான வியாதி. ஒருவரின் மனதில் உள்ள பயம், பாதுகாப்பின்மை உள்ளிட்ட அனைத்துக் கெட்ட எண்ணங்களையும் அது வெளியில் கொண்டு வந்துவிடும். அதிலும் காதலில் அதனுடைய ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். தன் காதலன் எப்போதும் தன்னுடனேயே இருக்க வேண்டும், தன்னை மட்டுமே விரும்ப வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பது நியாயம் தான்.

ஆனால் அவள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைக்காவிட்டால்? பதட்டத்தில் பல தவறான செய்கைகள் மூலம் அவள் தன் பொறாமையை வெளிப்படுத்துவாள். அதுப்போன்ற 5 நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன. நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து கொண்டிருந்தால் போச்சு.
நாம் என்னதான் செய்தாலும் சரி, நம் மேல் குற்றம் சுமத்திக் கொண்டு தான் இருப்பாள். ஃபேஸ்புக்கில் உங்களை ஆராய்வாள் அடிக்கடி நீங்கள் மொபைலில் அழைத்துப் பேசினாலும் சரி, தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாலும் சரி, இங்கே தான் இருக்கிறேன் என்று சொன்னாலும் சரி பொறாமைக் காதலி நம்பமாட்டாள். நம்பிக்கை இல்லாத ஒரு உறவு ஏற்படுத்தும் விரிசலை விட வேறு எதுவும் ஏற்படுத்திவிட முடியாது.

உங்கள் மேல் உங்கள் காதலிக்கு முழு நம்பிக்கை இல்லாமல் போகும் போது, நீங்கள் உங்கள் சொந்தக்காரப் பெண்ணுடன் பழகினால் கூட, அது உங்கள் உறவைக் கெடுத்துவிடும். பெண்கள் எப்போதுமே கேள்விகளைக் கேட்டுக் குடைவது வழக்கம்.

அதே நேரத்தில் ஒரு பொறாமைப்படும் பெண்ணிடமிருந்து புறப்படும் எந்தக் கேள்விக்கும் நம்மால் இலகுவாக பதில் கூறிவிட முடியாது.

நாம் எந்த பதிலைக் கூறினாலும், அது அவளுக்கு சரியான பதிலாகவே அமையாது. உங்களுடன் வேலை செய்பவரோ அல்லது நீங்கள் தேநீர் அருந்த போகும் கடையில் வேலை செய்பவரோ ஒரு பெண்ணாக இருக்கலாம். அந்தப் பெண்களுக்கு உங்களைப் பிடிக்குதோ இல்லையோ, அவர்களுடன் எந்த நோக்கிலும் உங்கள் காதலியின் முன் பேசிவிடாதீர்கள். அப்படிப் பேசினால் அவள் படுத்தும் பாட்டில் நீங்கள் எந்தப் பெண்ணுடனும் பேச முடியாமல் போகலாம். ஆண்களே! பார்த்து கவனமாக நடந்துக்குங்க…

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்…!! கட்டுரை
Next post ஆண்கள் இந்த காபியை குடிக்கலாமா?