மதகு ஒன்றின் மீது மோதிய பட்டா ரக வாகனம்…!!
Read Time:1 Minute, 13 Second
வவுனியா மன்னார் வீதி, நான்காம் கட்டையில் இன்று(28) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் வவுனியா பகுதியிலிருந்து பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று அதன் முன் எதிரே வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி, வலது பக்கமாக திருப்பிய வேளையில் அதன் பின்னால் வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வருவதை திடீரென அவதானித்த பட்டா சாரதி பாரிய விபத்தொன்றை தடுக்கும் முகமாக பட்டா வாகனத்தை அருகிலிருந்த மதகு ஒன்றின் மீது மோதியுள்ளார்.
மேலும் இவ்விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதோடு, வாகனம் மாத்திரம் சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating