கருப்பாக இருக்கும் நீங்கள் வெள்ளையாக மாற வேண்டுமா?

Read Time:4 Minute, 8 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-2நம்முடைய முகமானது, வெயில், சுற்றுப்புற மாசு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்மையான நிறத்தின் பொலிவினை இழக்கச் செய்கிறது.

மேலும் முகத்திற்கு போடும் சிலவகை க்ரீம்களை நாம் பயன்படுத்துவதால், சருமத்தின் செல்கள் அழிந்து, முகத்தில் கருமை நிறம் அதிகரித்து, சருமத்தில் சுருக்கங்கள் போன்ற பலவிதமான சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே கடுமையான வெயில் காரணமாக நமது முகப் பொலிவின் அழகை தடுப்பதற்கு நமது வீட்டிலேயே இருக்கு அற்புதமான சில வழிகள்!

பால் மற்றும் தேன்

ஒரு டீஸ்பூன் பால் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சமஅளவில் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, சுத்தமான தண்ணீரில் முகத்தினைக் கழுவி வர வேண்டும். இதனால் முகமானது, பிரகாசமாய் ஜொலிக்கும்.

முட்டை மற்றும் எலுமிச்சை

ஒரு முட்டையை எடுத்து அதை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

பின் அது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் கருமை நிறம் மறைந்து முகம் வெண்மையாக இருக்கும்.

தக்காளி

தக்காளியை பாதியாக நறுக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறண்ட சருமம் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சியை துருவி அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் சருமம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

எண்ணெய் மசாஜ்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் வேப்பிலையை மசித்து போட்டு, அந்த எண்ணெயை லேசாக சூடு படுத்தி அதனை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

யோகார்ட் மற்றும் கடலைமாவு

2 ஸ்பூன் யோகார்டுடன் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால், பொலிவான முக அழகினைப் பெறலாம்.

சீரக நீர்

1 ஸ்பூன் சீரகத்தை ஒரு கப் நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் மிதமானதும் அந்த நீரை வடிகட்டி அதில் முகம் கழுவி வந்தால், முகத்தில் இருக்கும் மாசுக்கள் மறைந்து சருமம் பளிச்சிடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோகத்தில் இருக்கின்றீர்களா? இந்த விடியோவை பார்த்தால் போதும் வயிறு வலிக்க சிரிப்பீங்க…!! வீடியோ
Next post ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: 6.2 ரிக்டரில் பதிவு..!!